ETV Bharat / state

போதையில் காவலர்களுக்கு மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் கைது - காவலர்களை தரக்குறைவாக பேசி ரகளை

சீர்காழி காவல் நிலையத்திற்குள் குடிபோதையில் புகுந்து காவலர்களை தரக்குறைவாக பேசி ரகளையில் ஈடுபட்ட வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.

வழக்கறிஞர் கைது
வழக்கறிஞர் கைது
author img

By

Published : Nov 16, 2021, 5:14 PM IST

மயிலாடுதுறை: சீர்காழியைச் சேர்ந்த பார் கவுன்சில் செயலாளரும், வழக்கறிஞருமான ராஜேஷ் என்பவர் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தனியார் பேருந்து மீது குடிபோதையில் ராஜேஷ் காரை ஓட்டிச் சென்று தனியார் பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் சீர்காழி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ராஜேஷ் மீது புகார் அளித்தனர். புகாரின் பேரில் ராஜேஷ் விசாரணைக்காக காவல் நிலையம் வந்தார்.

காவலர்களுக்கு மிரட்டல் விடுத்த வழக்கறிஞர்

குடிபோதையில் வந்தவர் நேராக காவல் நிலையத்திற்குள் புகுந்த காவல் ஆய்வாளர் அறைக்குச் சென்றார். இதனைக் கண்ட காவலர் ஒருவர் அவரை அழைத்து கேள்வி கேட்டார். ஆனால், ராஜேஷ் தான் ஒரு வழக்கறிஞர் எனக் கூறி, காவலரையே திருப்பி கேள்வி கேட்கத் தொடங்கினார்.

இதனையடுத்து, வெளியே சென்ற அவர், காவல் துறையினரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, ‘நீ யார் உன்னை என்ன செய்றேனு பார்’ என மிரட்டில் தொனியில் பேசினார். தொடர்ந்து, புகார் அளிக்க வந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டினார்.

வழக்கறிஞர் கைது

வார்த்தைக்கு ஒரு முறை தான் வழக்கறிஞர் எனக் கூறி, அங்கிருந்த காவல் துறையினரையே மிரட்டி, மரியாதை இல்லாமல் நடந்துகொண்ட ராஜேஷின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது.

இந்நிலையில், வழக்கறிஞர் ராஜேஷ், அவரது நண்பர் சிவா ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் புகார்தாரருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ சங்க தலைவர் ராஜாவை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: Defamation case - நீதிமன்றத்தில் ஆஜரான ஹெச்.ராஜா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.