மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன்சம்பத் கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்தினார்.
சீர்காழி அருகே புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலில், மகா கும்பாபிஷேகம் வரும் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருப்பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் நேற்று(ஏப்.23) மாலை இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்தினார்.
தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ 27 வது குருமகா சன்னிதானத்திடம் அருளாசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நமது கோயிலுக்கு குடமுழுக்கு செய்யவே போராட வேண்டியுள்ளது.
கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொண்டு சிறப்பாக குடமுழுக்கு நடத்தலாம். ஆனால் சிலர் இதனை தடுக்க நினைக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால் மதசார்பற்ற அரசுகள் இந்து கோயில் நிர்வாகத்தில் இருந்து விலக வேண்டும். நமது கோயில்களை அறங்காவலர் குழு அமைத்து இந்துக்களே நடத்தே வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா உயிரிழப்பு: ஆம்புலன்சிலிருந்து கீழே விழுந்த உடல்... ஷாக்கிங் வீடியோ!