ETV Bharat / state

7 பேர் விடுதலை: ஆளுநருக்கு தமிமுன் அன்சாரி எச்சரிக்கை - 7 பேர் விடுதலை

நாகப்பட்டினம்: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் அலட்சியப்படுத்தினால் "கவர்னரே வெளியேறு" என்ற போராட்டம் வெடிக்கும் என எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அன்சாரி
அன்சாரி
author img

By

Published : Nov 4, 2020, 6:42 PM IST

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டுமென மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்துவந்தார். பன்னோக்கு விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாக காரணம் கூறப்பட்டது.

நேற்று உச்ச நீதிமன்றம் இதுபற்றி கூறுகையில், அந்த அறிக்கை தேவையில்லை என்றும், இன்னும் ஏன் இவர்களின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவு எடுக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

எனவே, உச்ச நீதிமன்றத்தின் கருத்தின் அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்களை ஆளுநரிடம் அனுப்பி ஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே 29 ஆண்டுகளாக அவர்கள் தண்டனையை அனுபவித்து விட்டார்கள் எனவும், சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கூட அவர்களை மன்னித்து பழிவாங்கும் எண்ணம் இல்லை என்று கூறிவிட்டனர்.

ஆளுநர் இனியும் அவர்களின் விடுதலையை தாமதிக்கக்கூடாது. ஆளுநர் இதை அலட்சியப்படுத்தினால், "கவர்னரே வெளியேறு" என்ற போராட்டத்தை ஜனநாயக சக்திகள் முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறோம். அதுபோல் ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை ஆண்டுகளையும் நிர்ணயம் செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோயில் நிலங்களை பிற பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது - நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.