மயிலாடுதுறையில் பிரசித்திப் பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா, ஜனவரி 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சிறப்பு திருப்பலி நேற்று (ஜன.16) நடைபெற்றது. தஞ்சாவூர் மறை மாவட்ட முதன்மை குரு ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் உலக அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் தழைத்தோங்க சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
தொடர்ந்து புனித கபிரியேல் தூதர், மாதா மற்றும் பதுவை, வனத்து அந்தோணியார் திருஉருவம் தாங்கிய மூன்று தேர்கள் ஆலய வளாகத்தை சுற்றி பவனியாக வந்தன. ஜே.ஜே. பிரிட்டோ அடிகளார் புனிதம் செய்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் உத்தராயன புண்ணிய கால உற்சவம் நிறைவு!