ETV Bharat / state

மீனவர்கள் பாதுகாப்பில் அண்ணாமலை வீண் பெருமை - ஆளூர் ஷா நவாஸ் ஆவேசம் - அண்ணாமலை வீண் பெருமை

பிரதமர் மோடி ஆட்சியில் ஒரு மீனவர் மீதுகூட துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ள நிலையில், வீண் பெருமை பேசாமல் மீனவர்களைக் காப்பாற்றுங்கள் என ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Aug 2, 2021, 2:25 PM IST

நாகப்பட்டினம்: கீச்சாங்குப்பம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 28ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் திமுக மாவட்டச் செயலாளர் கௌதமன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. படகில் இருந்தவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் கலைச்செல்வன் என்ற மீனவரின் இடதுபக்கத் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சட்டப்பேரவை உறுப்பினர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் பகுதிகளைச் சார்ந்த மீனவர்கள் 10 பேர், கடந்த 28-07-2021 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நம் மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை அத்துமீறி கொடூரமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அனைவரும் படகில் படுத்து தங்களை தற்காத்துக் கொள்ள முயன்றுள்ளனர்.

அதில் கலைச்செல்வன் என்ற மீனவரின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்துள்ளார். தற்போது நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கலைச்செல்வன் மயக்க நிலையிலேயே உள்ளார்.

"மோடி ஆட்சியில் ஒரேயொரு மீனவர் மீது கூட இலங்கை கடற்படையால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

தற்போது நடைபெற்றிருக்கும் துப்பாக்கிச்சூட்டிற்கு அவர் என்ன பதில் சொல்வார்? எனவே, பெருமை பேசாமல், மீனவர்களை காப்பாற்றுமாறு பிரதமரிடம் அவர் வலியுறுத்த வேண்டும்.

நமது மீனவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திவரும் இலங்கை கடற்படை மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும்' - மீனவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.