ETV Bharat / state

சீர்காழியில் சிறப்பாக நடைபெற்ற சந்தனக்கூடு விழா

நாகை: அன்னை அஜ்மத் பீவி தர்க்காவின் 78ஆவது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரி விழா சிறப்பாக நடைபெற்றது.

ANNAI  Ajmat Beevi Tarka Khanduri Festival in Sirkazhi

author img

By

Published : Mar 3, 2020, 2:06 PM IST

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலையில் அன்னை அஜ்மத் பீவி தர்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான 78ஆவது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரி விழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து ஒருவார காலம் சிறப்புப் பாத்தியாக்கள் ஓதப்பட்டு முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் இன்று விடியற்காலை நான்கு மணிக்கு நடைபெற்றது. சந்தனம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அன்னை அஜ்மத் பீவி தர்காவில் சந்தனம் பூசும் வைபவமும் சிறப்புத்துவா ஓதி வழிபாடும் நடைபெற்றன.

78ஆவது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரி விழா

இதில் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மவுலானாவின் கலிபாக்கல், சீடர்கள், பங்கேற்றனர். இந்த விழாவில் மதச்சார்பற்று அனைத்து மதத்தினரும் திரளாகக் கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர்.

இதையும் படிங்க: தீட்டை காரணம் காட்டி வீட்டிலிருந்து தனி அறைக்கு ஒதுக்கப்படும் பெண்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.