ETV Bharat / state

சீதளாம்பிகை ஆலய தீ மிதித் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்! - festival

நாகை: மயிலாடுதுறை அருகே ஸ்ரீ சீதளாம்பிகை மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தீ மிதித் திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.

கோயில் திருவிழா
author img

By

Published : Apr 23, 2019, 10:47 PM IST

நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள ஸ்ரீ சீதளாம்பிகை மாரியம்மன் ஆலயத்தில் சித்தரை மாதத் திருவிழா கொண்டாடப்பட்டது. கடந்த 8ஆம் தேதி தொடங்கிய இந்த தீ மிதித் திருவிழாவின் 8ஆம் நாளான்று, அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவை ஊர்வலம் வருவது வழக்கம். அதன்படி ஊர்வலம் நடத்தப்பட்டு, பல நாட்கள் விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

கோயிலில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு தீபம் ஏற்றி, அம்பாளை வழிபட்டனர். பக்தர்கள் கூட்டம் அலை மோத, வானவேடிக்கைகளுடன் கோயில் திருவிழா களைக்கட்டியது.

கோயில் தீமிதி திருவிழா

Intro:மயிலாடுதுறை அருகே ஸ்ரீ சீதளாம்பிகை மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி உற்சவம், விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அராயபுரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாம்பிகை மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் சித்திரை மாதத் திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8ஆம் நாள் திருவிழாவான இன்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவை ஊர்வலமாக ஆலயத்தினை வந்தடைந்தன. அங்கு உள்ள தீக்குண்டத்தில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபம் ஏற்றி அம்மனை வழிபாடு செய்தனர். தீமிதி உற்சவ உற்சவத்தின் போது வானவேடிக்கை பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.