நாகை மாவட்டம் வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகில் இருந்த அம்பேத்கர் சிலைஇருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஆகஸ்ட் 25ஆம் தேதி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் வரதராஜூலு உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
இதில் அதே பகுதியைச் சேர்ந்த ஆறு. சரவணன், பாண்டியராஜன், லெக்லத் லெனின், பாபுராஜ், சரத்குமார் ஆகிய ஐந்து பேரை கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட சிறையிலும், வேங்கை தமிழ், அரவிந்த்ராஜ், மணிகண்டன், விஜயராகவன், கணேஷ்குமார், சாமிநாதன் ஆகிய 6 குற்றவாளிகளை திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேதாரண்யத்தில் உலக பூரண மதுவிலக்குக் கோரி தியாகிகள் உண்ணாவிரதம்