நாகப்பட்டினம் மாவட்டம் நல்லத்துக்குடி ஊராட்சியில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிதாசன் என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், நல்லத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 50 பேருடன் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதிதாசன் அதிமுகவில் இணைந்தார்.
மயிலாடுதுறை சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன், சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அனைவரையும் வரவேற்று சால்வை அணிவித்து கட்சியில் இணைத்து கொண்டனர். அதைத் தொடர்ந்து கட்சியில் இணைந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அனைவரும் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக கூடி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க; அதிமுக கட்சியில் அரியணைக்கு போட்டியிடுவது யார்? முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகுமா?