மயிலாடுதுறை: தமிழ்நாடு முழுவதும் தை 2ஆம் நாள் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விவசாயிகள் தாங்கள் வளர்த்துவரும் பசுகளையும், காளைகளையும் குளிப்பாட்டி வர்ணங்கள் பூசி கொண்டாடுவர். அப்போது மாடுகளை வைத்து வழிபாடும் நடந்துவர். ஆனால், இந்த மாட்டு பொங்கலை மாடுகளை வளர்க்காத மீனவர்களும் கொண்டாடி வருவது தனி கவனம் பெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் உழவர்கள் எப்படி மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து படையல் வைத்து மாடுகளை கொண்டாடிவருகிறார்களோ, அதேபோல் திருமுல்லைவாசல் மீனவர்கள் தங்களிடம் உள்ள விசைபடகுகள், பைபர் படகுகளை சுத்தம் செய்து பழுது நீக்கி படகுகளில் கரும்பு, வாழை மரங்கள், தோரணங்கள் கட்டி கொண்டாடிவருகின்றன்.
அதாவது ஆயுத பூஜையில் செய்யும்படியான கொண்டாட்டத்தில் ஈடுபட்டுகின்றனர். அதோடு தங்களது குடும்பங்களுடன் கடலில் உலா வந்து மகிச்சியையும் வெளிப்படுத்துகின்றனர். தொழில் எதுவாக இருந்தாலும் பாரம்பரியம் மாறாது பொங்கல் கொண்டாடும் மீனவர்களின் செயல் அனைவரையும் கவரும்படி உள்ளது.
இதையும் படிங்க: திருச்சியில் ரூ.7 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்