ETV Bharat / state

'முனைவர் பட்டம் பெற்ற ஒரே ஆதீனம் தருமபுரம் ஆதீனம் தான்' - ஏ.கே.எஸ்.விஜயன் - தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி

இந்தியாவில் உள்ள சைவ ஆதீனங்களிலேயே முனைவர் பட்டம் பெற்ற ஒரே ஆதீனம் தருமபுரம் ஆதீனம் தான் என தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் புகழாரம் சூட்டியுள்ளார்.

aks.vijayan  dharmapuram college  aks.vijayan participate in dharmapuram college function  ஏ.கே.எஸ்.விஜயன்  தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி  பவள விழா
தருமபுரம் ஆதீனம்
author img

By

Published : Oct 12, 2021, 3:17 PM IST

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் பவள விழாவானது, இந்த ஆண்டு அனைத்து மாதமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பவள விழாவின் மூன்றாவது மாத விழா, கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

விழாவில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை வகித்து, அருளாசி வழங்கிப் பேசினார்.

தருமபுரம் ஆதீனம் பவளவிழா

மேலும் இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், 100 மாணவிகளுக்கான தையல் பயிற்சியினை தொடங்கி வைத்தார். இதையடுத்து, முன்னதாக பயிற்சி பெற்று நிறைவு பெற்ற மாணவிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர், பதவியேற்ற முதல்நாள் தொடங்கி சிறப்பாகப் பணியாற்றி வருவதுபோல், தருமபுரம் 27ஆவது குருமகா சந்நிதான பீடம் அமர்ந்த நாள்முதல் சைவத்துக்கும், தமிழுக்கும் அளப்பரிய தொண்டாற்றி வருகிறார்.

இந்தியாவில் உள்ள சைவ ஆதீனங்களிலேயே முனைவர் பட்டம் பெற்ற ஒரே ஆதீனமாக 27ஆவது குருமகா சந்நிதானம் விளங்குகிறார்' என்றார்.

இதையடுத்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மயிலாடுதுறை எம்.பி., ராமலிங்கம், கல்லூரியில் 1988 முதல் 2016 வரை படித்த வணிகவியல் துறை முன்னாள் மாணவர்கள் வணிகவியல் துறைக்கு அமைத்துத் தந்த ஸ்மார்ட் வகுப்பறையினைத் திறந்துவைத்து வாழ்த்துரை வழங்கினார்.

இதையும் படிங்க: 'நிலக்கரி தட்டுப்பாடு... தமிழ்நாட்டில் அவசர காலத் திட்டம் அவசியம்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.