மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் புதிதாக அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்தாண்டு முதலே கல்லூரி தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளதால், தற்காலிக கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள தேரழந்தூர் கம்பர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று (செப் .20) நேரில் பார்வையிட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களச் சந்தித்த அமைச்சர், 'மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்மை திருத்தச் சட்டத்தை விவசாயிகளுக்கு ஏற்புடைய திட்டமாகவே நாங்கள் பார்க்கிறோம். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை உண்டு என்றும், கூடுதலாக விற்பனை வாய்ப்புள்ள இடங்களுக்கு விவசாயிகள் வேளாண் உற்பத்தியை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் பிரதமர் அறிவித்திருக்கிறார். இதை விவசாயி என்ற முறையில் நான் வரவேற்கிறேன்.
இந்த வேளாண் மசோதா குறித்து ப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார். அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், அரசாங்கம் அதிக விலைக்கு கொள்முதல் செய்யும்போது விவசாயிகள் தனியாரிடம் தங்கள் உற்பத்தி பொருளை விற்க முன்வர மாட்டார்கள். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களை நஷ்டத்திற்கு கொடுக்க கூடாது என்பதற்காகத்தான் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உருவாக்கியிருக்கிறோம்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:தேர்தல் முடிந்தாலும், அடுத்தது திமுக ஆட்சிதான் என்று ஸ்டாலின் கூறிக்கொண்டே இருப்பார்- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்