நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த வாழக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட சூரட்சிவேலி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட கூலி விவசாய தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்தச் சூழலில் இப்பகுதி மக்களுக்கு சுடுகாட்டு கட்டடமும், சுடுகாட்டிக்கு செல்ல சாலை வசதியும் பல ஆண்டுகளாக இல்லை. இதனால், இறந்தவர்களின் உடலை வயல்வெளியில் தூக்கிச்செல்லும் அவலம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இறந்ததை அடுத்து அவரின் உடலை சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலில் பயிர்கள் சேதமடையும் வண்ணம் தூக்கிச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
வீடியோவில் பேசியுள்ள சூரட்சிவேலி அதிமுக கிளைச் செயலாளர், எதிர்க்கட்சி ஆனாலும் சரி, தான் இருக்கும் ஆளும் அதிமுக ஆனாலும் சரி மக்களின் பல நாள் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றஞ்சாட்னார். இது, நாகை மாவட்ட அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் : நடவடிக்கை எடுக்கக்கோரி கனிமொழி வலியுறுத்தல்!