மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கொத்தங்குடி ஊராட்சியில் சரவணன்(45), ஜெயலட்சுமி(60), வேல்முருகன் (37) ஆகியோரின் வீடுகள் இடிந்து விழுந்தன.
இதேபோல் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முத்துக்குமார், வேலம்புதுக்குடி மாதா கோயில் தெருவைச் சேர்ந்த பீட்டர் ஆகியோர் வீடுகளும் இடிந்து விழுந்தன. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இது குறித்து தகவலறிந்து வந்த பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிவாரணம் வழங்கினார்.
இதையும் படிங்க: டெல்டா பகுதிகளில் மழை பொலிவு குறித்த விவரம்