ETV Bharat / state

அமைச்சர் கார் மீது காலணி வீச்சு என்பது கண்டிக்கத்தக்கது என அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி - பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் கோபமாக மாறிக்கொண்டிருக்கிறது

அமைச்சர் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் கண்டிக்கத்தக்கது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டியளித்துள்ளார்.

அமைச்சர் கார் மீது காலணி வீச்சு கண்டிக்கத்தக்கது அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி

author img

By

Published : Aug 14, 2022, 6:51 PM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா, பொறையாரில் தனியார் திருமண மண்டபத்தில் செம்பனார்கோவில் அதிமுக தெற்கு ஒன்றிய செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை அதிமுக மாவட்டச்செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்; 'தமிழ்நாட்டில் இளைஞர்கள் மிகமோசமாகப் பாதிக்கப்படும் அளவிற்கு கஞ்சா விற்பனை தாராளமாக கிடைப்பது வேதனையளிக்கிறது. தமிழ்நாடு அரசு, காவல் துறை இதனை முழுமூச்சாக செயல்பட்டு இதனைக்கட்டுப்படுத்த வேண்டும். கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களைக் கைது செய்ய வேண்டும், அவர்களது சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும். வாய்வார்த்தையாக சொல்லாமல் நிறைவேற்றிக்காட்ட வேண்டும்.

யூரியா தொடர்ந்து தட்டுப்பாடாக இருந்து வருகிறது. யூரியா தட்டுப்பாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேட்டால் நீலிகண்ணீர் வடிப்பதாக வேளாண்துறை அமைச்சர் கூறுகிறார். விவசாயிகளுக்குத் தேவையான அளவு யூரியாவை வாங்கி இருப்புவைக்கவில்லை. விவசாயிகளுக்குத் தேவையான உரங்களைத் தட்டுப்பாடு இன்றி கிடைக்க செய்ய வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களில் உரம் இருக்கிறது. விலைக்கு கிடைக்காது. விவசாயப் பயிர்கடன் வாங்குபவர்களும், குறுவை தொகுப்பு திட்டத்தில் உள்ளவர்களுக்கும் வழங்கத்தான் உள்ளது என்கின்றனர். தமிழ்நாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் நடந்திருக்கக்கூடாது. பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது செருப்பு வீசுவது போன்ற சம்பவங்கள் நடப்பது கண்டிக்கத்தக்கது.

திமுக தேர்தல் அறிக்கையில் 80 விழுக்காடாக நிறைவேற்றிவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால், எதையும் செய்யவில்லை. பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் கோபமாக மாறிக்கொண்டிருக்கிறது’ என்றார். இந்நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:தொடர் விடுமுறையால் கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.