கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு தஞ்சை மண்டல சிறப்பு அலுவலர் சண்முகம் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சிறப்பு அலுவலர் சண்முகம், “கரோனாவால் விவசாய பணிகள் தடையின்றி நடைபெற முன்னுரிமை அளித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. விவசாய பணிகளை மேற்கொள்ள விவசாயக் கடன்கள் வழங்க வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாய்க்கால்கள் நீர்நிலைகளை தூர்வார முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
இதையும் படிங்க...மின்சார சட்டத்தை திருத்தும் முடிவையே மத்திய அரசு கைவிட வேண்டும் - ராமதாஸ்