ETV Bharat / state

மனநலன் பாதிப்பிலிருந்து குணமடைந்த இளைஞர் - 2 ஆண்டுகளுக்குப் பின் பெற்றோரிடம் சேர்ந்தார்!

author img

By

Published : Dec 11, 2021, 1:02 PM IST

மனநலன் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த இளைஞரை மனநல மறுவாழ்வு மைய நிர்வாகிகள் மீட்டு, இரண்டு மாதங்கள் சிகிச்சை அளித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா முன்னிலையில் இளைஞரின் பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி கார்டன் மனநல மறுவாழ்வு மையம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மயிலாடுதுறை: பிகார் மாநிலம் மாதேபூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் சௌத்ரி. இவரது மகன் ஹீராலால் சௌத்ரி (24). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மனநலன் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் தனது பெற்றோர், மனைவியைப் பிரிந்து அவரது வீட்டிலிருந்து வெளியேறி, பல மாநிலங்களைத் தாண்டி தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் சீர்காழியில் ஆக்ரோஷமான மனநிலையுடன் கடை வீதிப் பகுதியில் வருவோர், செல்வோரை கட்டைக்கழியுடன் விரட்டி அச்சுறுத்தி வந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசனின் உத்தரவின் பேரில் சீர்காழி கார்டன் மனநல மறுவாழ்வு மையத்திலிருந்து அதன் இயக்குனர் ஜெயந்தி உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் சென்று அவரை மீட்டனர்.

மறுவாழ்வு மையத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அளிக்கப்பட்ட சிறப்பான சிகிச்சையின் காரணமாக இரண்டு மாதங்களுக்குள்ளாகவே ஹீராலால் சௌத்ரி மனநலன் தேர்ச்சியடைந்தார். இதையடுத்து, அவரிடம் குடும்ப விவரங்களை அறிந்த சீர்காழி கார்டன் மனநல மறுவாழ்வு மையத்தின் இயக்குனர் ஜெயந்தி உதயகுமார் மற்றும் நிர்வாகிகள், இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா முன்னிலையில் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகனைக் கண்ட ஹீராலாலின் தந்தை சுரேஷ் சௌத்ரி மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: அதிகரித்து வரும் ஒமைக்ரான்: நம் மன நலனை பேணிக் காக்க சில எளிய வழிகள்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.