ETV Bharat / state

சசிகலாவுக்கு எதிராக சூளுரை: அதிமுகவினர் தீர்மானம்! - மயிலாடுதுறை அதிமுக ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறையில் நடந்த அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக சூளுரை உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சசிகலாவுக்கு எதிராக சூளுரை
சசிகலாவுக்கு எதிராக சூளுரை
author img

By

Published : Jun 19, 2021, 11:06 PM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுக்கா எடுத்துக்கட்டி ஊராட்சியில் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ் ஏற்பாட்டில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை பாராட்டுதல், அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தல், அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் சசிகலா உள்ளிட்டோருக்கு எதிராக சூளுரைத்தல் ஆகிய மூன்று தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் சீர்காழி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி தலைமையில் மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் செல்லத்துரை உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் ஊராட்சிக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: இன்னைக்கு ஒரு புது ஆடியோ! - தொண்டரிடம் பேசிய சசிகலா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.