கோடை வெயிலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுகவினர் நீர் மோர் பந்தலை பொது இடங்களில் திறந்துவருகின்றனர்.
அந்த வகையில், மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம், கிட்டப்பா அங்காடி ஆகிய இரு இடங்களில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் நேற்று (ஏப். 14) திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக மாவட்டச் செயலாளருமான எஸ். பவுன்ராஜ் கலந்துகொண்டு நீர் மோர் பந்தலைத் திறந்துவைத்தார். அப்போது, பொதுமக்களுக்கு தர்ப்பூசணி, இளநீர் ஆகியவற்றை வழங்கினார்.
தொடர்ந்து, குளிர்ச்சியூட்டும் இயற்கை பழச்சாறுகள், நீர் மோர்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: நீர்மோர்-தண்ணீர் பந்தலை தொடக்கிவைத்த அமைச்சர்