ETV Bharat / state

'ரஜினிக்கு என்சிஆர் என்றால் என்னவென்றே தெரியாது' - தமிழன் பிரசன்னா கடும் தாக்கு - ரஜினி பைத்தியம்

நாகை: என்சிஆர் என்றால் ரஜினிக்கு என்னவென்றே தெரியாது என திமுக செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா கடுமையாக விமர்சித்துள்ளார்.

dmk-tamilan-prasanna-
தமிழன் பிரசன்னா
author img

By

Published : Feb 14, 2020, 10:03 AM IST

நாகை மாவட்டம் பொறையாரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு ஆகியோர் பங்கேற்று உறையாற்றினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழன் பிரசன்னா கூறுகையில், "மத்திய அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை டெல்லி தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளது. இருந்தபோதிலும் பிரதமர் நரேந்திர மோடி தேசிய குடிமக்கள் பதிவேட்டைச் செயல்படுத்துவது உள்ளிட்ட நாட்டு மக்களை அச்சுறுத்தும் அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுகவா அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிமையா என்ற கேள்வி எழுகிறது. மேலும் அவர் ரஜினியையும் ஆதரிக்கிறார் பொன். ராதாகிருஷ்ணனையும் ஆதரிக்கிறார். அதிமுக ஆட்சி அகற்றப்பட்ட பிறகு அவர் சிவகாசி மக்களாலேயே அடித்து விரட்டப்படுவார். அவ்வாறு அடித்து விரட்டப்படும்போது அவர் உடனடியாக பாஜகவில் சேருவார். அதற்காகப் பாஜகவில் துண்டுபோடுவதற்காக இவ்வாறு நடந்துகொள்கிறார்.

ரஜினிக்கு என்ஆர்சி, என்பிஆர் ஆகியவை குறித்த புரிதலே இல்லை. இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு என்றால் தாம் வந்து போராடுவதாக ரஜினி கூறுகிறார். ஆனால் பக்ருதீன் அலி அகமது பேரன், அசாமின் முதல் பெண் முதலமைச்சர், கார்கில் போரில் வாழ்க்கையை இழந்த ராணுவ வீரன் ஆகியோர் குடியுரிமை அற்றவராக இருக்கிறார்கள். அசாமில் உள்ள தலைவர்கள் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புரிதலோ சிந்தனையோ ரஜினிக்குக் கிடையாது. ஆகையால் நடிகரை நடிகராக மட்டுமே பார்க்க வேண்டும். ரஜினிக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது" என்றார்.

பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து தமிழன் பிரசன்னா பேட்டி

இதையும் படிங்க: தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்கும் ரஜினி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.