தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி கடலில் மீன்பிடித்த நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் மீனவர்களுக்கும், வெள்ளப்பள்ளம் மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த விவகாரம் நாகப்பட்டினம் மாவட்ட கடலோர மீனவ கிராமங்களில் பூதாகரமாக வெடிக்கவே பல்வேறு கிராம மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளையும் எஞ்ஜின்களையும் பயன்படுத்தக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை, இரட்டை மடிவலை அதிவேக எஞ்ஜின்களை பயன்படுத்த தடை விதிக்க வலியுறுத்தி சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த 19 கிராம மீனவர்கள் சார்பில் தரங்கம்பாடியில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஒரு வார காலத்திற்குள் இவைகளுக்கு எதிராக மீன்வளத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் 19 கிராம மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது.
இதன் பின்னர் மீன் வளத்தையும், வாழ்வாதாரத்தையும் காக்க வலியுறுத்தி, தொடுவாய், பழையார், தரங்கம்பாடி, வானகிரி உள்ளிட்ட 19 கிராம மீனவர்கள் நாகை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: கொரோனா தடுப்பு குறித்து வெளிநாட்டு தூதர்களுடன் ஆலோசனை