மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள அரசு மணல் குவாரிக்கு தனியார் டீசல் விற்பனை நிலையத்திலிருந்து டேங்கர் லாரி மூலம் டீசல் கொண்டு செல்லப்பட்டது.
இன்று 6,000 லிட்டர் டீசலுடன் சென்ற டேங்கர் லாரி பூங்குடி கிராமத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி அருகே இருந்த வயலில் தலைகுப்புற கவிழ்ந்தது. இவ்விபத்தில் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். ஓட்டுநர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
ஆபத்தை உணராத மக்கள்: இந்நிலையில் லாரியை கிரைன் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மீட்கும் போது டேங்கரில் இருந்து வெளியேறிய டீசலை ஆபத்தை உணராமல் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பாட்டில்கள், கேன்கள், வாளிகளில் போட்டி போட்டு பிடித்துச்சென்றனர்.
போலீசார் அவர்களை எச்சரித்தபோதும் அதனைப்பொருட்படுத்தாமல் கிடைக்கும் பாட்டில்களில் எல்லாம் டீசலை பிடித்துச்சென்றனர்.