நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் அரசு பெரியார் மருத்துவமனையில், கழிவுகளை அகற்றி ஸ்மித் ஹவுஸ் கீப்பிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இங்கு சேரும் குப்பைகள் தனியாக தரம் பிரிக்கப்பட்டு, அவற்றை ஒரு இடத்தில் சேகரித்து வைப்பது வழக்கம். அவற்றை மயிலாடுதுறை நகராட்சி சார்பில், குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.
இந்நிலையில், சில தினங்களாக குப்பைகளை வெளியே எடுத்துச்செல்ல நகராட்சி ஊழியர்கள் வரவில்லை. இதனால் குப்பைகளை மருத்துவமனை வாசலில் தனியார் நிறுவன ஊழியர்கள் கொட்டிச் செனறனர்.
இதுகுறித்து, தகவலறிந்து வந்த நகராட்சி சுகாதார அதிகாரிகள், தனியர் நிறுவனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், அவற்றை எடுத்துச்செல்லும் வாகன வாடகை பணம் ஆயிரம் ரூபாய்யும் வழங்க உத்தரவிட்டனர்.