மயிலாடுதுறை: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தையல்நாயகி அம்பாள் சமேத வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் நவகிரகங்களில் முதன்மையான செவ்வாய் ஸ்தலமாகவும் உள்ளது, செல்வ முத்துக்குமாரசுவாமி, 18 சித்தர்களின் முதன்மையான தன்வந்திரி தனித்தனி சன்னதிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
இக்கோவிலில் உள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு, இங்கு வழங்கப்படும் திருச்சாந்து உருண்டடை எனும் பிரசாதத்தை உட்கொண்டால் 4,448 வியாதிகள் குணமடையும் என கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் சீடர் சுவாமி பிரணவானந்தா தலைமையில் தைவான், ஸ்பெயின், கஜகஸ்தான், குரோஷியா, ரஷ்யா, இங்கிலாந்து, பங்களாதேஷ், அர்ஜென்டினா, உருகுவே ஆகிய 9 நாடுகளைச் சேர்ந்த 30 பேர் கொண்ட வெளிநாட்டு குழுவினர் வருகை தந்து சிறப்பு வழிபாடு நடத்தினர் அவர்கள் சுவாமி, அம்பாள், செல்வ முத்துக்குமார சுவாமி, செவ்வாய் பகவான் சன்னதிகளில் வழிபாடு நடத்தினர்.
இதையும் படிங்க:கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 2,765 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்