நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாள்தோறும் கள்ளச்சாராயம், மது பானங்கள் கடத்தப்படுவது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது.
இதனைத் தடுப்பதற்காக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மேலும், மது கடத்தலைத் தடுப்பதற்காக சிறப்பு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாகை மாவட்டம் பெரம்பூர் கடைத்தெருவில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, நீலவெளியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் காரில் 800லிட்டர் கள்ளச்சாராயத்தை சாக்கு மூட்டைகுள் வைத்து கடத்திவந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கடத்தல்காரரிம் இருந்து 800 லிட்டர் கள்ளச்சாராயமும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்த பெரம்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : செம்மரக்கட்டைகளை காரில் கடத்திச்சென்ற நபர் தப்பியேட்டம்