தமிழ்நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள காரணத்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூரை அடுத்த பாலக்குறிச்சி பகுதியில் இயங்கிவந்த டாஸ்மாக் கடையில் கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு அடையாளம் தெரியாத கும்பல் அங்கிருந்த கடை காவலாளிகள் அந்தோணிசாமி, மைக்கேல் ராஜ் ஆகிய இருவரையும் கட்டிப்போட்டு தாக்கி 73 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்து தப்பிச்சென்றனர்.
அதனைத் தொடர்ந்து தகவலறிந்து வந்த நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தலைமையிலான காவல் துறையினர் டாஸ்மாக் கடையில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மதுபானங்கள் திருட்டுச் சம்பவம் குறித்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மதுபானங்கள் திருட்டில் ஈடுபட்ட திருக்கண்ணங்குடியைச் சேர்ந்த ஹரிஹரன்(27), குரு பாலன்(20), தனராஜ் (20), தமிழ் மாறன் (21), புல்புல் (எ) பிரவீன்(19), நாகப்பட்டினம் அடுத்த செல்லூர் ரதீஷ் குமார் (26), கலையரசன் (20), சதீஷ் (27)ஆகிய 8 குற்றவாளிகளை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
அதற்கடுத்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:டாஸ்மாக்கிற்குப் படையெடுத்த மதுப்பிரியர்கள் - இரண்டு நாளில் ரூ. 854 கோடி வசூல்!