நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட போலி தனியார் நிறுவன கண்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக சென்னை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், ஆந்திராவிலிருந்து வந்த கண்டெய்னர் லாரியில் 310 பொட்டலங்களில் 661.5 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், கண்டெய்னர் லாரியில் வந்த திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ரமணன் (33), தவமணி (34), நாகபட்டினத்தைச் சேர்ந்த செல்வராஜ் (54), ஐயப்பன் (35), பரமானந்தம் (43) ஆகியோரைக் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கஞ்சாவை ஆந்தராவிலிருந்து லாரி மூலமாக நாகப்பட்டினத்திற்கு கொண்டுவந்து பின்னர் நாகப்பட்டினத்திலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: இலங்கைக்கு கடத்த முயன்ற போதைப் பொருள் பறிமுதல்