இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் குழுமம், நாகை பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் தேசிய பள்ளிகளுக்கு இடையேயான கடற்கரை கையுந்து போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், தேசிய பள்ளிகளுக்கிடையேயான 65ஆவது கடற்கரை கையுந்து போட்டி நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் இன்று தொடங்கியது. இப்போட்டியான 14,17,19 வயதுக்குள்பட்டோரின்கீழ் நடைபெறவுள்ளது
இன்று முதல் 29ஆம் தேதிவரை நான்கு நாள்கள் நடைபெறும் இப்போட்டிகளில் தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், குஜராத், ஒடிசா, தெலங்கானா உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களைச் சேர்ந்த 140 மாணவ, மாணவிகள் கொண்ட 54 அணிகள் பங்கேற்றுள்ளன. முன்னதாக, இப்போட்டியினை நாட்டு நலப்பணித்திட்ட துணை இயக்குநர் வாசு தொடங்கிவைத்தார். இதில் முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மாற்றத்தை நோக்கி குமரி முதல் தலைநகர் வரை ஒற்றைக்கால் மிதிவண்டி பயணம்..!