சாதனை புத்தகத்தில் தினந்தோறும் புதிய சாதனைகளை மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது பெயர்களைப் பதித்துவருகின்றனர். இதை ஏன் செய்கிறாய் என்று கேட்பவர்களின் வாய்களை அடைக்கும்வகையில் அதையே தொடர்ச்சியாகச் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நிகழ்வுகளும் உண்டு.
சமீபத்தில் 51 ஆயிரத்து 620 ஸ்டேப்ளர் பின்களைச் சங்கிலி போல் உருவாக்கி அதில் ஒரு உருவத்தையும் படைத்து உலகில் யாரும் செய்யாத உலக சாதனையை நமது சென்னை இளைஞர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். அந்த வகையில், தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் தாய் மொழி தமிழ் மீது உள்ள ஆர்வத்தையும், மதிப்பையும் வெளிகாட்டும் வகையில் பல்வேறு முயற்சிகளைச் செய்துவருகின்றனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீசங்கரா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் இலக்கிய மன்ற நிறைவு விழா நடைபெற்றது. இவர்கள் தமிழின் பெருமையை விளக்கும்வகையில் புதிய முயற்சியை மேற்கொண்டனர். அதில், 605 மாணவ, மாணவிகள் 7 நிமிடம் 10 விநாடிகள் தமிழ் என்னும் எழுத்து வடிவில் அசையாமல் அணிவகுத்து நின்று உலக சாதனையை படைத்தனர்.
இதைப் பதிவுசெய்த ஜெட்லி புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பினர், சான்றிதழ், பதக்கங்களை வழங்கி கெளரவித்தனர். இச்சாதனையானது முன்பு வேலூர் மாணவர்கள் நிகழ்த்திய சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'காட்டுக்குள் ஒரு திருவிழா' - 2000 கிடாவெட்டி கோலாகலம்!