ETV Bharat / state

உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 463ஆம் ஆண்டு கந்தூரி விழா

author img

By

Published : Jan 27, 2020, 7:40 AM IST

நாகை: நாகூர் தர்காவின் 463ஆம் ஆண்டு கந்தூரி விழா விழாவை முன்னிட்டு ஒரே நேரத்தில் வான வேடிக்கை மற்றும் வண்ண விளக்குகளால் ஜொலித்த தர்கா மினாராக்களைக் கண்டு இஸ்லாமியர்கள் உற்சாகமடைந்தனர்.

நாகூர் தர்ஹாவின் கந்தூரி விழா கொடியேற்றம்
நாகூர் தர்ஹாவின் கந்தூரி விழா கொடியேற்றம்

உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 463ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாகை மீரா பள்ளி வாசலில், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட கொடிகள் துவா ஓதப்பட்டு, கப்பல் வடிவ ரதம், பீங்கான் ரதம், பெரிய ரதம், சின்ன ரதம், செட்டிப்பல்லக்கு உட்பட 5 ரதங்களில், ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டது.

தாரைத்தப்பட்டைகள் முழங்க நாகை மீராப்பள்ளி வாசலில் இருந்து புறப்பட்ட ரதங்கள், நாகையின் முக்கிய வீதிகளில் வலம் வந்து, நாகூர் தர்கா அலங்கார வாசலை வந்தடைந்தது. பின்னர் சிறப்பு துவா ஒதப்பட்டு ஐந்து மினாராக்களிலும் ஒரே நேரத்தில் கொடிகள் ஏற்றப்பட்டன. அப்போது வான வேடிக்கைகள் விண்ணை அலங்கரிக்க, வண்ண விளக்குகளால் ஜொலித்த தர்கா மினாராக்களைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

நாகூர் தர்காவின் கந்தூரி விழா கொடியேற்றம்

இந்த விழாவில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் தலைமையில் 1500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, மாற்று உடையில் மக்களோடு மக்களாக கலந்து காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் தர்கா நிர்வாகத்தின் சார்பாக கந்தூரி விழாவிற்கு வருகை தந்துள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ்: மருந்து தயாரிக்கும் பணிகளில் சீனா மும்முரம்!

Intro:உலக புகழ்பெற்ற நாகூர் தர்ஹாவின் 463 ஆம் ஆண்டு கந்தூரி விழா கோலாகலம் ;Body:உலக புகழ்பெற்ற நாகூர் தர்ஹாவின் 463 ஆம் ஆண்டு கந்தூரி விழா கோலாகலம் ; ஒரே நேரத்தில் வாண வேடிக்கை மற்றும் வண்ண விளக்குகளால் ஜொலித்த தர்ஹா மினாராக்கள் ; இஸ்லாமியர்கள் உற்சாகம் ; லட்சக்கணக்கானோர் பங்கேற்பு.

உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 463
ஆம் ஆண்டு கந்தூரி விழா இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாகை மீரா பள்ளி வாசலில் இருந்து கொடி ஊர்வலம் தொடங்கியது. சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட கொடிகள் துவா ஒதப்பட்டு, கப்பல் வடிவ ரதம், பீங்கான் ரதம், பெரிய ரதம், சின்ன ரதம், செட்டிப்பல்லக்கு உட்பட 5 ரதங்களில், ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
தாரைதப்பட்டைகள் முழங்க நாகை மீராப்பள்ளி வாசலில் இருந்து புறப்பட்ட ரதங்கள் , நாகையில் முக்கிய வீதிகளில் வலம் வந்து, நாகூர் தர்கா அலங்கார வாசலை இரவு வந்தடைந்தது. பின்னர் சிறப்பு தூஆ ஒத்தப்பட்டு 5 மினாராக்களிலும் ஒரே நேரத்தில் கொடிகள் ஏற்றப்பட்டது. அப்போது வான வேடிக்கைகள் விண்ணை அலங்கரிக்க, வண்ண விளக்குகளால் ஜொலித்த தர்ஹா மினாரக்களை கண்டு பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கந்தூரி விழாவில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் தலைமையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி, மாற்று உடையில் மக்களோடு மக்களாக கலந்து காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் தர்கா நிர்வாகத்தின் சார்பாக கந்தூரி விழாவிற்கு வருகை தந்துள்ள பக்தர்களுக்கு குடிநீர் , கழிவறை , வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.