ETV Bharat / state

எரிபொருள் இன்றி கரை திரும்ப முடியாமல், நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்கள்! - நாகை மீனவர்கள் வீடியோ

நாகப்பட்டினம்: ஐந்து படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 46 மீனவர்கள் எரிபொருள் இன்றி கரை திரும்ப முடியாமல் நடுக்கடலில் தத்தளித்து வருகின்றனர்.

நாகை மாவட்டச் செய்திகள்  நாகை மீனவர்கள் வீடியோ  nagai fishers video
எரிபொருள் இன்றி கரை திரும்ப முடியாமல், நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்கள்
author img

By

Published : Mar 31, 2020, 7:19 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேரந்த மீனவர்கள் 50க்கும் மேற்பட்டோர், ஐந்து படகுகளில் கேரளாவில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள், கடந்த 10ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதனிடையே கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையறியாத மீனவர்கள், மீன் பிடித்துவிட்டு கொச்சின் துறைமுகத்திற்கு திரும்பியபோது, வெளிமாநில மீனவர்கள், படகுகள் இங்கு இருக்கக்கூடாது எனக் கூறியுள்ளனர். இதில் செய்வதறியாது திகைத்த மீனவர்கள் 46 பேரும் ஐந்து படகை எடுத்துக்கொண்டு நாகப்பட்டினம் துறைமுகத்தை நோக்கி புறப்பட்டனர். இதில், படகில் இருந்த எரிபொருள் தீர்ந்ததால் பாம்பன் அருகே ஐந்து படகுகளும் நடுக்கடலில் நின்றனது.

எரிபொருள் இன்றி கரை திரும்ப முடியாமல், நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்கள்

இதனால் கரை திரும்ப முடியாமல் நாகப்பட்டினம் உள்ளிட்ட 46 மீனவர்கள் நடுக்கடிலில் பரிதவித்து வருகின்றனர். இதனிடையே நடுக்கடிலில் உணவின்றி உயிருக்குப் போராடும் தமிழ்நாடு மீனவர்கள் 46 பேரையும் காப்பற்றி கரை சேர்க்க வேண்டும் என அந்த மீனவர்கள் வாட்ஸ்-ஆப் வீடியோவை அனுப்பி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 7 கோடி மக்களைக் காப்பாற்றுமளவிற்கு தமிழ்நாடு அரசிடம் நிதியுள்ளதா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.