பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து, தமிழ்நாட்டில் இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் மாவட்டந்தோறும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாகையில் இதுகுறித்து வேளாண்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில் தகுதியற்ற பலரும், போலி ஆவணங்கள் மூலம் திட்டத்தில் பணம் பெற்றது தெரியவந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 59 ஆயிரம் விவசாயிகள் பயனாளிகளாக உள்ளனர். அதில் முதற்கட்டமாக 9 ஆயிரம் விவசாயிகளின் பட்டியல்களை அலுவலர்கள் ஆய்வு செய்ததில், கிசான் திட்டத்திற்குத் தகுதி இல்லாத 3 ஆயிரம் நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதையடுத்து உடனடியாக அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அவர்களிடமிருந்து முதற்கட்டமாக 30 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் மேலும் பலர் பிடிபட வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
கிசான் திட்டம் முறைகேடு: நாகையில் 3 ஆயிரம் வங்கிக் கணக்குகள் முடக்கம் - bank accounts frozen in nagai
நாகை: பிரதமரின் கிசான் நிதித் திட்ட முறைகேடு குறித்து ஆய்வு செய்கையில், நாகையில் முதற்கட்டமாக 3 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.