ETV Bharat / state

பள்ளி கட்டணத்தை செலுத்த முடியவில்லை... மகனுடன் பெற்றோர் தற்கொலை! - நகை செய்யும் தொழிலாளி

நாகை: மகனின் கல்வி கட்டணத்திற்கு பணம் கிடைக்காத விரக்தியில், பெற்றோர் தங்களின் மகனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட தம்பதிகள்
author img

By

Published : Jun 12, 2019, 9:25 PM IST

நாகை, வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். நகை செய்யும் தொழிலாளியான இவர் அதேபகுதியில் மனைவி லட்சுமி, மகன் ஜெகதீஷ்வரனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நாகையில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவந்த தனது மகன் ஜெகதீஷ்வரனுக்கு செந்தில்குமாரால் கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை என தெரிகிறது. பள்ளி திறக்கப்பட்டு பத்து நாட்கள் ஆகியும் கட்டணம் செலுத்தப்படாததால், பள்ளி நிர்வாகம் ஜெகதீஸ்வரனை கண்டித்துள்ளது.

இதையடுத்து, மகனின் கல்விக் கட்டணத்திற்கு பலரிடம் பணம் கேட்டும் கிடைக்கவில்லை என மனைவி லட்சுமியிடம் செந்தில்குமார் புலம்பியுள்ளார். மேலும், பள்ளி கட்டணம் கூட செலுத்த முடியாத நாம் ஏன் உயிருடன் இருக்க வேண்டும் என முடிவு செய்து இன்று மதியம் உணவுடன் விஷத்தைக் கலந்து மகனுக்கு கொடுத்துவிட்டு அவர்களும் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நீண்ட நேரம் ஆகியும் செந்தில்குமாரின் வீட்டுக் கதவு திறக்கப்படாததால் காவல் துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.

நாகையில் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கதவை உடைத்து பார்த்தபோது, மூன்றுபேரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. மூன்று சடலங்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:மகனின் கல்வி கட்டணத்திற்கு பணம் கிடைக்கவில்லை என்ற விரக்தியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் விஷம் அருந்தி தற்கொலை.

Body:மகனின் கல்வி கட்டணத்திற்கு பணம் கிடைக்கவில்லை என்ற விரக்தியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் விஷம் அருந்தி தற்கொலை.

நாகை, வெளிப்பாளையம், வீதி குளக்கரை தெருவை சேர்ந்த, நகை தொழில் செய்யும் தொழிலாளி செந்தில்குமார் தனது மனைவி லட்சுமி மற்றும் அவரது மகன் ஜெகதீஸ்வரனுடன் வசித்துவந்துள்ளனர்.

இந்நிலையில், நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் ஜெகதீஸ்வரனுக்கு பள்ளி திறந்து 10 நாட்கள் ஆகியும் இன்னும் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை.இதனால் பள்ளி நிர்வாகம் ஜெகதீஸ்வரன் கல்வி கட்டணத்தை உடனடியாகச் செலுத்துமாறு கூறியுள்ளது. பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த ஜெகதீஸ்வரன் தனது பெற்றோரிடம் கல்வி கட்டணம் கட்ட சொல்லி தினமும் கேட்டு வந்துள்ளான். நகை தொழிலாளியான செந்தில்குமார் போதுமான வருமானம் இல்லாத காரணத்தால், குடும்ப செலவிற்காக பலரிடம் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்ததால் ,மேலும் அவருக்கு கடன் தர யாரும் முன்வரவில்லை.

இந்த சூழலில், பள்ளியில் படிக்கும் தனது ஒரே மகனுக்கு தன்னால் கல்வி கட்டணம் செலுத்த முடிய வில்லையே என்ற வேதனையில் இருந்த செந்தில்குமார் தனது மனைவியுடன் இதுகுறித்து புலம்பியுள்ளார்.

படித்து போலீஸ் வேலைக்கு சேர வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் தங்களது ஒரே மகனுக்கு கல்வி கட்டணம் கூட செலுத்த முடிய வில்லையே இதற்கு மேல் உயிருடன் இருந்து என்ன பயன்? என்ற வேதனையில் இன்று மதிய உணவுடன் விஷத்தை கலந்து மூவரும் சாப்பிடுவிட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்தனர்.

செந்தில்குமார் இன்று வேலைக்கு வராத காரணத்தால் அவர் வேலை செய்யும் நகைக்கடை உரிமையாளர், ஒரு பையனை செந்தில்குமார் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். வீட்டிற்கு வந்த பையன் மூவரும் வீட்டில் விஷம் அருந்தி உயிர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்தவர், இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

படித்து போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவில் இருந்த தனது மகனுக்கு, கல்விக்கட்டணம் கூட செலுத்த முடிய வில்லையே என்ற வேதனையில் இருந்த தாய் தந்தையர், விஷம் சாப்பிடுவதற்கு முன்பாக தங்களது ஒரே மகனுக்கு போலீஸ் போல உடை அணிவித்து விஷத்தையும் ஒட்டியுள்ளனர். போலீஸ் உடையில் பள்ளி சிறுவன் தனது பெற்றோரின் மடியில் உயிர் இறந்து கிடந்ததை கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் கதறி அழுதது காண்போர் நெஞ்சை நெகிழ செய்தது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.