ETV Bharat / state

அதிமுக கூட்டத்திற்கு சென்ற வாகனம் விபத்து - 3 பேர் பலி! - road accident

நாகை: குத்தாலம் தெற்கு ஒன்றியத்தில் அதிமுக கூட்டத்திற்கு சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 பேர் பலி
author img

By

Published : Apr 12, 2019, 7:50 AM IST

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கந்தமங்கலம் என்ற கிராமத்தில், அதிமுக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் குத்தாலம் தெற்கு ஒன்றிய செயலாளர் தமிழரசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக சரக்கு வாகனத்தில் கட்சித் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். இக்கூட்டம் முடிந்து அதே வாகனத்தில் 20 பேர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அனந்தநல்லூர் என்ற இடத்தில் வாகனத்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால் நிலை தடுமாறி அருகில் இருந்த வாய்க்காலில் அந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வாகனத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிமுக கூட்டத்திற்கு சென்ற வாகனம் விபத்து - 3 பேர் பலி

இதில் கந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விநாயக ராஜா, அருள்தாஸ், தனபால் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் மதி, பிச்சை, ஓட்டுநர் மாரிமுத்து ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 15 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து பாலையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:குத்தாலம் தெற்கு ஒன்றியத்தில் அதிமுக கூட்டத்திற்கு சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து 3 பேர் பலி 3 பேர் கவலைக்கிடம்:-

Body:நாகை மாவட்டம் குத்தாலம் தெற்கு ஒன்றியத்தில் கந்தமங்கலம் என்ற கிராமத்தில் அதிமுக கட்சி ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் குத்தாலம் தெற்கு ஒன்றிய செயலாளர் தமிழரசன் தலைமையில் மங்கைநல்லூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சரக்கு வாகனத்தில் கட்சித் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். கூட்டம் முடிந்து சரக்கு வாகனத்தில் 20 பேர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அனந்தநல்லூர் என்ற இடத்தில் வாகனத்தின் டயர் வெடித்து வாகன நிலை தடுமாறி அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்தவர்களை மீட்டு 108 வாகனம் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கந்தமங்களம் கிராமத்தை சார்ந்த விநாயக ராஜா, அருள்தாஸ், தனபால் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மதி, பிச்சை, ஓட்டுநர் மாரிமுத்து ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 15 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பாலையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கட்சியா விபத்தில் உயிரிழந்தவர்களின் உயிரை மீட்டுக் கொண்டுவரும் என்று கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.