நேற்று முன்தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியம்பள்ளி என்ற கிராமத்தில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக திறந்தவெளி வாகனத்தில் சென்றார்.
அப்போது அகஸ்தியம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன், வேதமணி, லட்சுமணன் ஆகியோர் செல்வராஜின் வாகனத்தை வழிமறித்து எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டி அவரை கல்லால் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து, அக்கட்சியின் வேதாரண்யம் ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மூவரையும் கைது செய்து இன்று சிறையில் அடைத்தனர்.