ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் எங்கு பிறந்ததோ அங்கேயே சென்று முட்டையிடும் சிறப்பைக்கொண்டது. அவை ஆண்டுதோறும் டிசம்பர்-ஏப்ரல் மாதங்களில் முட்டையிடுவது வழக்கம். அதன்படி, நாகை மாவட்டம் கோடியக்கரை, ஆறுக்காட்டுத்துறை, வேதாரண்யம் கடற்கரைகளுக்கு வந்த ஆமைகள் ஆயிரத்து 750 முட்டைகள் இட்டன.
அந்த முட்டைகளைப் பறவைகள், விலங்குகளிடமிருந்து பாதுகாக்க அரசு வனத் துறை உதவியுடன் சேகரித்து, செயற்கை பொரிப்பகங்களில் வைத்து கவனித்துவந்தது. அப்படி வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து முதலில் வெளிவந்த 221 ஆமைக்குஞ்சுகள் இன்று கோடியக்கரை கடலில் விடப்பட்டன.
இதையும் படிங்க: உயிருக்கு போராடிய ஆமையை மீட்டு கடலுக்குள் விட்ட வனத்துறை...!