ஒருங்கிணைந்த நாகப்பட்டினம்-மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவருகிறது. நாகை-மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஏப். 18) ஒரேநாளில் புதிதாக 219 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 153ஆக அதிகரித்துள்ளது. இதுவரை ஒன்பதாயிரத்து 725 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம், நாகப்பட்டினம் மருத்துவமனைகளில் ஆயிரத்து 270 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
கரோனாவால் நேற்று இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 158ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: பொதுமக்களுக்கு காவல்துறையினர் இலவச முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு