மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை விவசாயிகளிடம் இருந்து 1.85 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 70 ஆயிரம் டன் நெல் அரவைக்காக வெளி மாவட்டங்களில் உள்ள அரவை மில்லுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் கிடங்கிற்கு அனுப்பப்படாமல் நேரடியாக அரவை மில்லுக்கு அனுப்பப்படுகின்றன. அவ்வகையில், மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து இரண்டாயிரம் டன் நெல்மூடைகள் கிருஷ்ணகிரியில் உள்ள அரிசி அரவை ஆலைக்கு 42 சரக்குப் பெட்டிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.