நாகை மாவட்டத்தில், விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்யப்பட்ட பல லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள், ஆங்காங்கே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. நெல்மணிகளை அரைப்பதற்காக அங்கிருந்து ரயிலிலும், லாரிகளிலும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நாகை, திருப்பூண்டி, கீழ்வேளூர், கீழையூர், சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு, நெல் மூட்டைகள் ஒட்டுமொத்தமாக நாகையில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கிற்குக் கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறு கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள் இறக்குவதற்கு போதிய இடங்கள் இருந்தும், நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்களின் அலட்சியத்தால் நெல் மூட்டைகளை இறக்க விடாமல், தரகுத் தொகைக்காக அவர்களைக் காத்துக் கிடக்க வைக்கின்றனர்.
அலுவலர்களின் அலட்சியத்தால் வீதியில் கிடக்கும் பல ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் ! - 200 lorry holding
நாகப்பட்டினம்: நுகர்பொருள் வாணியக் கழக அதிகாரிகளின் அலட்சியத்தால் நாகையில் 200 லாரிகளில் ஏற்றி வரப்பட்ட 20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்மூட்டைகள் இறக்க முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது.

நாகை மாவட்டத்தில், விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்யப்பட்ட பல லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள், ஆங்காங்கே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. நெல்மணிகளை அரைப்பதற்காக அங்கிருந்து ரயிலிலும், லாரிகளிலும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நாகை, திருப்பூண்டி, கீழ்வேளூர், கீழையூர், சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு, நெல் மூட்டைகள் ஒட்டுமொத்தமாக நாகையில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கிற்குக் கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறு கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள் இறக்குவதற்கு போதிய இடங்கள் இருந்தும், நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்களின் அலட்சியத்தால் நெல் மூட்டைகளை இறக்க விடாமல், தரகுத் தொகைக்காக அவர்களைக் காத்துக் கிடக்க வைக்கின்றனர்.
Body:நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளின் அலட்சியத்தால் நாகையில் 200 லாரிகளில் ஏற்றி வரப்பட்ட 20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்மூட்டைகள் இழக்க முடியாமல் தேக்கம்.
டெல்டா மாவட்டத்தில் கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில், விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்யப்பட்ட பல லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் ஆங்காங்கே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு நெல்மணிகளை அரைப்பதற்காக அங்கிருந்து ரயில் மட்டும் லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நாகை மாவட்டம், திருப்பூண்டி, கீழ்வேளூர், கீழையூர், சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு , நெல்மூட்டைகள் ஒட்டுமொத்தமாக நாகையில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்படுகின்றன.
அவ்வாறு கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள் இறக்குவதற்கு போதிய இடங்கள் இருந்தும், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் அலட்சியத்தால் நெல்மூட்டைகள் இறக்க விடமால் கமிஷனுக்காக அவர்களை காத்து கிடக்க வைக்கின்றன.
இதனால் 200 லாரிகளில் வந்த 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள், நாகை மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே இழக்க முடியாமல் தேக்கமடைந்துள்ளதாக லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும் 400 குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கும் ஓட்டுனர்கள், ஒரு வார காலமாக நெல்லில் இருக்கும் இடம் அங்கேயே சமைத்து, சாப்பிட்டு நெல் மூட்டைகளை கண் விழித்துப் பாதுகாத்து வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அங்கிருந்த நுகர்பொருள் வாணிப கழக தரக்கட்டுப்பாட்டு அதிகாரி படம் பிடிக்கக் கூடாது என மிரட்டல் விடுத்தது, புகார் தெரிவித்த லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களை அங்கிருந்து விரட்டினர். நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் அலட்சியத்தாலும் கமிஷன் பிரச்சனையானாலும் நாகையில் 20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது சம்பவம் உணவுத்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
Conclusion: