நாகை மாவட்டத்திற்கு அருகாமையில் உள்ள புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து மது கடத்தல் என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதனை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் தனிப்படை அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தனிப்படையினர் கடந்த ஒருவார காலத்தில் மாவட்டம் முழுவதும் 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 162 ஆண், 21 பெண் என 183 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சோதனையில் 14,293 லிட்டர் சாராயமும், 34,560 லிட்டர் மது, 19 இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளனர்.