மயிலாடுதுறை அருகே மல்லியம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி (73), தாயார் உஷா ஆகியோர் மல்லியத்தில் வசித்துவருகின்றனர்.
பிப்ரவரி 28ஆம் தேதி கிருஷ்ணமூர்த்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி மகள் ராசாத்தி இன்று (மார்ச் 5) மல்லியத்தில் உள்ள தன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 16 பவுன் நகை, அரை கிலோ வெள்ளிப்பொருள்கள், 30 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது.
தகவலறிந்த குத்தாலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.