ETV Bharat / state

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் 148 திருமணங்கள் ரத்து!

கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வாரத்தின் கடைசி 3 நாள்கள் கோயில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவிருந்த 148க்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன.

Tirukkadaiyur Amirthakadeswarar temple
Tirukkadaiyur Amirthakadeswarar temple
author img

By

Published : Jan 8, 2022, 8:02 AM IST

மயிலாடுதுறை : தமிழ்நாடு அரசு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரத்தின் கடைசி 3 நாள்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல தடைவிதித்துள்ளது.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோயிலில் நித்திய பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன. பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கோயில்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உலகப்புகழ்வாய்ந்த தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயம் உள்ளது.

சிவபெருமான் மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்த தலம் என்பதால் இங்கு ஆயுள் விருத்தி வேண்டி 60 வயதிலிருந்து 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு நடைபெறும் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் கனகாபிஷேகம், பூர்ணா அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு திருமணங்கள் மற்றும் ஆயுள் ஹோமங்கள் செய்வார்கள். தற்போது அவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்களில் நடைபெறும் 148க்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கோயில் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடியது.

இதே போல் மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில், பரிமளரெங்கநாதர் ஆலயம், திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பெரிய கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை மூடப்பட்டு பக்தர்கள் இன்றி நித்தியபூஜை மட்டும் நடைபெறுவதால் போயில்கள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதையும் படிங்க : ஒமைக்ரானை ஒழிக்க வேப்ப மரத்திற்குத் திருமணம் செய்துவைத்த கிராம மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.