ETV Bharat / state

மொட்டையடிக்க கட்டணமில்லை, வள்ளலார் சர்வதேச மையம்; அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் 112 புதிய அறிவிப்பு

author img

By

Published : Sep 4, 2021, 5:45 PM IST

கோயில்களில் மொட்டையடிக்க கட்டணம் வசூலிக்கக் கூடாது, வள்ளலார் சர்வதேச மையம் என அமைச்சர் சேகர் பாபு பேரவையில் இன்று 112 புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.

சேகர் பாபு
சேகர் பாபு

சென்னை : ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 2959 திருக் கோயில்களில் பணிபுரியும் ஆசியர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படும், இதற்காக ஒரு ஆண்டுக்கு 13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் சேகர் பாபு கூறினார். தொடர்ந்து, சட்டப்பேரவையில்
அமைச்சர் சேகர்பாபு 112 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதிலுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு,

  1. ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 2 ஆயிரத்து 959 திருக் கோயில்களில் பணிபுரியும் ஆசியர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படும், இதற்காக ஒரு ஆண்டுக்கு 13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  2. திருக்கோயில்களில் பாதுகாப்பிற்கென 10,000 பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
  3. திருவருட்பிரகாச வள்ளலார் புகழைப் போற்றும் வகையில் வள்ளலார் சர்வதேச மையம் வடலூரில் அமைக்கப்படும்.
  4. கடந்த பத்தாண்டுகளாக திருக்கோயில் காணிக்கையாக வரப்பெற்ற பல மாற்று பொன் இனங்களில் திருக்கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக ஏனைய இனங்கள் மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்கியில் சொக்கத் தங்கமாக மாற்றி திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் பங்குகளில் முதலீடு செய்து அதிலிருந்து வட்டி மூலமாக திருக்கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகளை கண்காணிப்பிற்கு மூன்று மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு ஓய்வு பெற்ற நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் பணி மேற்கொள்ளப்படும்.
  5. சென்னை உள்பட தமிழ்நாட்டின் 10 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 150 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படும்.
  6. தமிழர் திருநாளாம் தைத்திருநாள் இல் 10 கோடி ரூபாய் செலவில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்படும்.
  7. பழனி, ஸ்ரீரங்கம் கோயில்களில் நாள் முழுவதும் வழங்கப்படும் அன்னதான திட்டம் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் திருத்தணிகை, சமயபுரம் திருச்செந்தூர் ஆகிய மூன்று கோயில்களிலும் விரிவுபடுத்தப்படும்.
  8. அர்ச்சகர் வேத பாராயணம், இசை கற்போர் ஆகியோருக்கு பயிற்சி கால ஊக்கத்தொகை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  9. திருக்கோயில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடி காணிக்கை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
  10. மண மக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பதற்கு அவர்களுக்குள் நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.
  11. தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான திருக்கோயில்களை அவற்றின் தொன்மை மாறாமல் பராமரிப்பது குறித்து வழிமுறைகளை கொண்ட கையேடு வெளியிடப்படும்.
  12. திருத்தணிகை திருச்செங்கோடு திருச்சி மலைக்கோட்டை திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய ஐந்து மலை திருக்கோயில்களுக்கு கம்பி வட ஊர்தி வசதி செய்திட சாத்தியக்கூறுகள் அறிவதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
  13. திருக்கோயில்களில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் தற்காலிகமாக பணி புரியும் 1500 பகுதியான பணியாளர்கள் பணி வரன்முறை செய்யப்படுவார்கள்.
  14. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் விளையாட்டு மைதானங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டவும் 25 கோடி ரூபாய் செலவிடப்படும்.
  15. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் 5 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றிவரும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் அதன் மூலம் 496 ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பயனடைவார்கள்.
  16. திங்கள்தோறும் திருக்கோயில்களில் தூய்மை பணி திட்டத்தின் கீழ் திருக்கோயில்களில் அனைத்து இடங்களிலும் உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  17. சென்னை, பழனி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் ரூ.5 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் தொடங்கப்படும்.
  18. திருக்கோயில்கள் சார்பாக பக்தர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய 22 திருமண மண்டபங்கள் ரூபாய் 53 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்படும்.
  19. துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராமக் கோயில்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற பூசாரிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத் தொகை 3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  20. கிராமப்புற பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்கள் மரணமடைந்து இறுதி சடங்கிற்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூபாய் 2000 இலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். உறுப்பினர் மறைந்தார் அவரது வாரிசு தாரருக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவி 15000 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
  21. திருக்கோயிலுக்கு பெருமளவில் வருகைதரும் பக்தர்களுக்கான முழுமையான அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த 40 முதல் நிலை திருக்கோயிலில் காண ஒருங்கிணைந்த பெருந் திட்டம் வகுக்கப்பட்டு 200 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
  22. அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் 6 இடங்களில் ரூபாய் 21 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
  23. திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் 150 கோடி மதிப்பீட்டில் திருப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  24. பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் அனைத்து தேவைகளை நிறைவு செய்யும் வகையில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் ரூபாய் 125 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
  25. ஆண்டு முழுவதும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்லும் பழனி, சமயபுரம், திருவண்ணாமலை, திருத்தணி மற்றும் இராமேஸ்வரம் ஆகிய திருக்கோயில்களில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் ரூபாய் 250 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
  26. நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் உள்பட 300 கோயில்களில் இருந்து பெறப்பட்ட திருப்பணி முன்மொழிவுகள் முறையாக பரிசீலிக்கப்பட்டு குடமுழுக்கு இதற்கான பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  27. 18 கோயில்களுக்கு ரூபாய் 8 கோடியே 70 லட்சம் செலவில் புதிய திருத்தேர்கள் செய்யப்படும்.
  28. கோயில்களுக்குச் சொந்தமான 37 திருக்குளங்கள் ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
  29. மதுரை கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி ரூபாய் 35 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  30. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சொந்தமான சென்னை பூந்தமல்லி சாலையில் உள்ள தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வணிக வளாகம் ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  31. திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் உள்பட 30 அம்மன் கோயில்களில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  32. ஆன்மிகச் செம்மல் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களை பாதுகாக்கும் நோக்கோடு சுற்றுச்சுவர் மற்றும் வனம் அமைப்பதற்கு ரூபாய் 15 கோடி செலவிடப்படும்.
  33. 34 சைவ திருத்தலங்களுக்கு ரூபாய் 9 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் திருப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  34. தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருள்மிகு வன்னியப்பர் கோயில் 150 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  35. 24 வைணவ திருத்தலங்களில் 5 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் திருப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  36. சென்னை மாதவரம் கைலாசநாத சுவாமி கோயிலுக்கு புதிய திருக்குளம் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
  37. திருத்தேரில் இயற்கை சீற்றங்களால் பழுதடையாது பாதுகாத்திட திருத்தேர் கொட்டகைகள் சூழ்நிலைக்கு தகுந்தவாறு ரூபாய் 10 கோடி செலவில் அமைக்கப்படும்.
  38. 9 திருக்கோயில்களுக்குச் சொந்தமான திருத்தேர் ரூபாய் 2 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
  39. சென்னை காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலுக்கு ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித்திருப்பூர் செய்யப்படும்.
  40. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மகாதேவர் திருக்கோயில் க்கு சொந்தமான பழைய அரண்மனை கட்டிடத்தில் இயங்கி வந்த பள்ளிகள் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு செயல்பாட்டில் கொண்டுவரப்படும்.
  41. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மகாதேவர் திருக்கோயில் க்கு சொந்தமான பழைய அரண்மனை கட்டிடத்தில் இயங்கி வந்த பள்ளிகள் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
  42. திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் கோடி லிங்கேஸ்வரர் திருக்கோயில் ரூபாய் 24 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  43. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  44. திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் அருள்மிகு அங்கநாத்தீஸ்வரர் திருக்கோயில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் திருப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  45. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் திருவேங்கட நாதர் பெருமாள் கோயிலில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
  46. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பட்டீஸ்வரம் பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  47. அட்டவீரட்டானத் திருத்தலங்களுள் இரு திருக்கோயில்களில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் திருப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  48. அழகர் கோயில் கள்ளழகர் கோயில் வட கிழக்குக் கோட்டை மதில் சுவர் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
  49. கடலூர் மாவட்டம் பொய்யன்பாடி ஆண்டவர் செல்லி அம்மன் கோயில் மதிற்சுவர் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
  50. கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் திருப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  51. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மின் வசதி ரூபாய் 90 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.
  52. சிவபெருமானின் பஞ்ச சபைகளில் ஒன்றான குற்றாலம் சித்திர சபையில் ரூபாய் 90 லட்சம் மதிப்பீட்டில் திருப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  53. திருநீர்மலை அரங்கநாத பெருமாள் கோயிலில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திருப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  54. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் கீழப்பாவூர் திருவல்லீஸ்வரர் திருக்கோயில் 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் திருப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  55. திருக்குவளை எட்டுக்குடி சுப்பிரமணியர் மற்றும் சிக்கல் சிங்காரவேலர் கோயில்களில் ரூ.2 கோடியே 20 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  56. மதுரை அழகர் கோயில், சோலைமலை முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக மலைப்பாதையை மேம்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.7 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  57. விழுப்புரம் மாவட்டம் சிங்கவரம் அரங்கநாதஸ்வாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக மலைப்பாதை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.3 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  58. திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்களில் ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  59. சூரிய ஒளி வெப்ப விளக்குகள் தேவைப்படும் அனைத்து கோயில்களிலும் பொருத்தப்படும்.
  60. திருக்கோயில்களின் கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள இடிதாங்கிகள் ஆய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படும். மேலும் தேவையான இடங்களில் புதியதாக பொருத்தப்படும்.
  61. முதுநிலை திருக்கோயில்களில் சிறப்பு அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் முழு விவர காட்சிகள் வெளியிடப்படும்.
  62. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயில் ஆகியவற்றிலுள்ள கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்படும்.
  63. நாகப்பட்டினம் இணை ஆணையர் மண்டலத்திற்கான ஒருங்கிணைந்த அலுவலக வளாகம் ரூ.3 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
  64. திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் வேதபுரீஸ்வரர் திருக்கோயில் சொந்தமான இடத்தில் வணிக வளாகம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
  65. ஓசூர் காளிகாம்பாள் காமாட்டீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் மலர் வணிக வளாகம் ரூபாய் 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
  66. திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டப்படும்.

இவை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் ஆகும்.

இதையும் படிங்க : கொடைக்கானல், ராமேஸ்வரத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.