மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தினர் கிடங்குகளில் அடுக்கி வைத்துள்ளனர்.
அந்த நெல் மூட்டைகளை அரவை மில்லுக்கு அனுப்பி, அவற்றை அரிசியாக்கி ரேஷன் கடைகளுக்கு விநியோகத்திற்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் தாலுக்காக்களில் கொள்முதல் செய்யப்பட்டு, கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நெல் மூட்டைகளை (1000 டன்) லாரிகள் மூலம் மயிலாடுதுறை ரயில் நிலையம் கொண்டு சென்று அங்கிருந்து சரக்கு ரயில் மூலம் சென்னையிலுள்ள அரவை ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இப்பணியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் கண்காணித்தனர்.
இதையும் படிங்க: ‘நெல் கொள்முதல் செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை’ - அமைச்சர் செங்கோட்டையன்