ETV Bharat / state

இன்று கரோனாவிலிருந்து தப்பித்த மதுரை!

மதுரை: மாவட்டத்தில் இன்று கரோனா வைரஸ் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இன்று கரோனாபிலிருந்து தப்பித்த மதுரை!
இன்று கரோனாபிலிருந்து தப்பித்த மதுரை!
author img

By

Published : May 7, 2020, 10:49 PM IST

மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் விரிவாக்க கட்டடத்தின் எதிரே இயங்கிவரும் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வரை 111 பேர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று கூடுதலாக யாரும் பாதிக்கப்பட வில்லை என்பதால், அதே எண்ணிக்கையில் தொடர்கிறது. தற்போது வரை மொத்தம் 111 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பலனின்றி இருவர் உயிரிழந்த நிலையில், 54 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். மேலும், 55 பேர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில், பாதிக்கப்பட்ட அல்லது பரிசோதனைக்கு வருகின்ற நோயாளிகளைத் தவிர, அதிக நபர்கள் வருவதைத் தடுக்க அந்த மருத்துவமனையை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக சுகாதாரத் துறையும் மதுரை மாநகராட்சியும் அறிவித்துள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் காவல்துறையின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 580 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.