ETV Bharat / state

நீதித்துறையில் ஊழல் உள்ளது எனும் கருத்தில் உறுதியாக இருக்கிறேன் - நேரில் ஆஜரான சவுக்குசங்கர் பதில் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யூ-ட்யூபர் சவுக்கு சங்கர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நேரில் ஆஜரானார். சவுக்கு சங்கர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

Youtuber
Youtuber
author img

By

Published : Sep 1, 2022, 3:39 PM IST

மதுரை: சென்னையைச்சேர்ந்த பிரபல யூ-ட்யூபரான சவுக்கு சங்கர், நீதித்துறையில் ஊழல் படிந்திருப்பதாக யூ-ட்யூப் வீடியோ ஒன்றில் தெரிவித்திருந்தார். இதனை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணைக்கு சவுக்கு சங்கர் நேரில் ஆஜரானார்.

அப்போது சவுக்கு சங்கர் கூறும்போது, "பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை. மேலும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் காரணமாக கூறும் வீடியோ பதிவுகளை வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

வீடியோ பதிவுகள் தங்களிடமே இருக்கும் என்று கூறிய நீதிபதிகள், நீதித்துறையில் ஊழல் படிந்திருப்பதாகத் தெரிவித்தது உண்மையா? எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்குப்பதிலளித்த சவுக்கு சங்கர், தான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன் என்றும், தனது வழக்கில் வேறு வழக்கறிஞர்கள் வாதாடும்பொழுது அவர்களுக்கான வேலை பாதிக்கப்படும் சூழ்நிலை இருப்பதால், தானே வாதாட விரும்புவதாகவும் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், இலவச சட்ட உதவிகள் ஆணையம் மூலம் வேறு வழக்கறிஞர்களை நியமிக்க விரும்புகிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவனை நியமிக்க விரும்புவதாக சவுக்கு சங்கர் தெரிவித்தார்.

இதனை அடுத்து சவுக்கு சங்கர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கருக்கு எதிராக சாட்டையை சுழற்றியது உயர் நீதிமன்றக்கிளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.