மதுரையில் மதன் (27) என்பவர் +2 படிக்கும் 17 வயதான பள்ளி மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி அடிக்கடி பாலியல் வன்புணர்வு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என மாணவிக்கு இளைஞர் கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இதனால் நடந்த சம்பவத்தை மாணவி வெளியில் கூறாமல் இருந்து வந்துள்ளார்.
இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இளைஞர் அடிக்கடி மாணவியை தொந்தரவு செய்துள்ளார். சென்ற சில நாள்களுக்கு முன்பு மாணவி திடீரென மாயமானார். உடனே பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
விசாரணையில் 17 வயது பள்ளி மாணவியை இளைஞர் மதன் கடத்திச் சென்று உறவினர் வீட்டில் அடைத்துவைத்து தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துவந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அங்கு சென்று மாணவியை மீட்டு, இளைஞரை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து பின், பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: உபி.யில் 17 வயது பட்டியலின சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர் கைது!