Petrol bomb blast: மதுரை: செல்லூர் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகரில் வசித்துவருபவர் பாலமுருகன். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது சகோதரி மகன் தீபன் சக்கரவர்த்தி, சோழவந்தான் அருகேயுள்ள மேலக்கால் பகுதியில் வசித்துவருகிறார். பாலமுருகனின் மகளை, தீபன் சக்கரவர்த்தி தனக்குத் திருமணம் முடித்துத் தருமாறு கேட்டுள்ளார்.
அப்போது பாலமுருகனின் மகள் திருமணம் செய்துகொள்ள மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தீபன் சக்கரவர்த்தி, நேற்று முன்தினம் (டிசம்பர் 23) பாலமுருகன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டுத் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலமுருகன் பெட்ரோல் குண்டுவீசியது தொடர்பாக செல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய தீபன் சக்கரவர்த்தியைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். திருமணத்துக்குப் பெண் தர மறுத்த உறவினர் வீட்டில் இளைஞர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Teacher suspended: மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கணினி ஆசிரியர் பணியிடை நீக்கம்