ETV Bharat / state

திருமண ஆசைக் கூறி சிறுமிக்கு பாலியல் கொடுமை! - child abuse in alanganallur

மதுரை: அலங்காநல்லூர் அருகேயுள்ள கிராமத்தில் சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி பாலியல் கொடுமை செய்த இளைஞரை சமயநல்லூர் மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளர் கைது செய்து சிறையில் அடைத்தார்.

அலங்காநல்லூர் காவல் நிலையம்  சிறுமிக்கு திருமண ஆசைக் கூறி பாலியல் கொடுமை  மதுரைச் செய்திகள் ‘  madurai news  child abuse in alanganallur  Alanganallur child abuse
திருமண ஆசைக் கூறி சிறுமியை பாலியல் கொடுமை செய்த வாலிபர் கைது
author img

By

Published : Jul 13, 2020, 9:40 AM IST

Updated : Jul 13, 2020, 9:57 AM IST

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி(20), அதே பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செ்யது கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இரண்டு நாள்கள் சிறுமியை பல்வேறு பகுதிக்கு கூட்டிச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.

இதற்கிடையில், நேற்றிரவு மாணவியை மீண்டும் தனது ஊரில் விட்டு விட்டு மாசிலாமணி தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாசிலாமணி மீது புகார் அளித்தனர்.

இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள், மாசிலாமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைதுசெய்து வாடிப்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் சிந்துபதி முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை: தாமாக முன்வந்து விசாரித்து காவல் துறை நடவடிக்கை!

Last Updated : Jul 13, 2020, 9:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.