தமிழ்நாடு முழுவதும் கரோனா நிவாரண நிதியாக ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் நிவாரண பொருட்களும், 1000 ரூபாயும் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நிவாரண பொருள்களை நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம் டோக்கன் முறையில் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக நியாயவிலை கடைகளின் முன்பு இடைவெளி விட்டு நிற்பதற்கு ஏற்பாடுகள் செய்து விநியோகம் செய்யப்படுகிறது.
இதனையொட்டி மதுரை அவனியாபுரம், திருமங்கலம், கூத்தியார்குண்டு பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று பொருள்களை வாங்கி செல்கின்றனர்.
இந்தநிலையில் மதுரை கூத்தியார்குண்டு பகுதியில் உள்ள நியாயவிலை கடையின் முன்பு பொதுமக்களுக்கு அந்த பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து கபசுரக் குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினர். நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும் கபசுரக் குடிநீரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், முதியோர்கள் என அனைவரும் பருகினர்.
இடையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 86 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு - சுகாதாரத்துறைச் செயலாளர் அறிவிப்பு!